Forensic expert

 
 

ஜெ.வின் உடல் பிரேத பரிசோதனை – தடயவியல் நிபுணர் விளக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன். பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு என்ற பெண்ணால் பெல்ட்பாம் முறையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறியவர் அவர். மத்திய அரசின் மிக உயரிய ‘பத்மபூஷண்’ விருது பெற்றவர். தமிழகத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தடயவியல் துறையை தனியாகப் பிரித்து சுதந்திரமாக இயங்க வழிவகுத்து, அதன் தலைவராகப் பணியாற்றினார். ஜெய்ப்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய ‘உலகின் முதல் மனித வெடிகுண்டு’ நூல், பல்வேறு நாடுகளில் காவல்துறையினரின் பாடப் புத்தகமாக இருப்பதுRead More