food

 
 

அன்னாசிப் பூ

நம் முன்னோர்களின் அனுபவ முறையில் கண்டறிந்த மருத்துவ மூலிகைகள்தான் இவை. இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி வந்ததால் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய அவசர (பாஸ்ட் புட்களில் ) உணவுகளில் இத்தகைய பொருட்கள் சேராமல் இருப்பதால் செரிமான சக்தியின்றி அஜீரணக் கோளாறு ஏற்பட்டு இதனால் வாயுக்கள் சீற்றமாகி மலச்சிக்கல், வாயு சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இரத்த சீர்கேடு அடைந்து மேலும் பல நோய்களை உருவாக்குகிறது. நோயின்றி வாழ உணவின் மூலமே மருந்தை உட்கொள்ளச் செய்தனர் நம் முன்னோர்கள். இதனை மறந்ததன் விளைவுதான் நோய்களின் தாக்கம். இது இந்தியா முழுவதும் காணப்படும். சைனா, கொச்சின் சைனா முதலிய இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இது இனிப்பு சுவையுடன் சுறுசுறு தன்மையுடன் இருக்கும். இதன் இதழ்கள் அனைத்தும் நட்சத்திரம்போல் 8 வால்களுடன் காணப்படும். இதனுள் விதை இருக்கும். பசியைத் தூண்டRead More


உப்பு குறைவாக சாப்பிட்டால் …..

நாள் ஒன்றிற்கு 5 கிராம் அளவு உப்பு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கூடுதலாக உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் என கனடாவின் மெக்மாஸ்டர் பல்கலை.,யில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, நாள் ஒன்றுக்கு 3 கிராம் சோடியம் உடலில் கலக்க வேண்டும். அதற்கும் குறைந்தால் மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தின் செயல்பாடுகள் நின்று உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். நாள் ஒன்றுக்கு 7.5 முதல் 12.5 கிராம் உப்பு எடுத்தால் தான் 3 அல்லது 5 கிராம் சோடியம் பெற முடியும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்தால் உடல் நலம் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மாவு விற்று மல்ட்டி மில்லியனரான முஸ்தஃபா

கேரளாவைச் சேர்ந்த முஸ்தஃபா. இவரது தந்தை சின்னச் சின்ன நொறுக்குத் தீனிகள் விற்கும் வியாபாரி. அப்போது சிறுவயதில் 5 பைசா, 10 பைசாவுக்கு ஸ்வீட்ஸ்களை விற்று வந்த முஸ்தஃபா இன்ஜினீயரிங் முடித்து யூ.கே உள்பட பல உலக நாடுகளில் வேலை செய்து, பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ முடித்து சிறிய அளவில் தொடங்கிய ஒரு நிறுவனம்தான் ID fresh (idly,dosa). 2006-ல் தினசரி 50 மாவுப் பாக்கெட்டுகள் விற்பனையாகி வந்தது. பிறகு முஸ்தஃபாவின் வளர்ச்சி எல்லாமே ஜெட் வேகம்தான். கேரளாவில் தங்களது வீட்டில் இருந்த தங்களது வியாபாரத்தை பெங்களூருவுக்கு மாற்றினார்கள். இதற்கென ஒரு கிச்சன் ஒதுக்கினார்கள் தினசரி விற்றுவந்த 50 மாவுப்பாக்கெட்டுகள் 500 ஆகியது, 500, 5,000 ஆக மாறியது. தற்போது 2016-ல் இந்த 5,000 – ம் 50 ஆயிரமாக மாறியுள்ளது. பெங்களூருவில் இருந்த வியாபாரம் மைசூரு,Read More


சாப்பிடும் உணவுகளில் விஷம் உள்ளது

நாம் அன்றாடம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் விஷம் இருப்பதில்லை. ஆனால் நாம் செய்யும் சில தவறுகளால், ஆரோக்கியமான உணவுகளும் விஷமிக்கதாகின்றன. உதாரணமாக, நாம் மொத்தமாக வாங்கும் உருளைக்கிழங்குகளை, பல நாட்களாக சேகரித்து வைத்திருக்கும் போது, அது முளைக்கட்ட ஆரம்பித்தால், அத்தகைய உருளைக்கிழங்கு விஷத்தன்மை மிக்கதாக மாறியுள்ளது என்று அர்த்தம் இதுப்போன்று நாம் சாப்பிடும் நிறைய உணவுகள் நம்மை அறியாமல் செய்யும் சில தவறுகளால் விஷத்தன்மையாகின்றன. இங்கு அத்தகைய உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதேப்போல் உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைகோ அல்கலாய்டு என்னும் விஷம் உள்ளது. இப்படிப்பட்ட உருளைக்கிழங்குகளை சாப்பிட்டால், அது வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றை உண்டாக்கும். பாதாம் பாதாமில் சில கசப்பாக இருக்கும். பாதாம் கசப்பதற்கு அதில் சையனைடு என்னும் விஷம் உள்ளதென்று அர்த்தம். மேலும் நிறைய ஆய்வுகளில், அளவுக்கு அதிகமாக கசப்பான பாதாமைRead More