flower

 
 

இக்சோரா -இட்லி பூ

இலக்கியப் பெயர் வெட்சி மலர் அல்லது வெட்சிப் பூ. வெண்ணிற வெட்சி, செந்நிற வெட்சி என இரண்டுவகை உண்டு. இக்சோரா பூக்கள் வீட்டுத் தோட்டங்களின் கட்டாய தாவரங்கள் பட்டியலில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. அலங்காரத் தேவைக்காக இதன் பல வகை வர்ணப்பூக்கள் பயன்படுகின்றன. ஒரு தேர்ந்த வீட்டுத் தோட்டத்தின்  அடிப்படை தகுதிகளில் இவ்விக்சோரா தாவாத்தின் அனைத்து வகைகளையும் கொண்டிருத்தல் ஒரு அம்சமாகும். இதன் பழங்களை சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்பது வழக்கம். மட்டுமல்லாது எக்சிமா போன்ற தோல் நோய்களுக்கும் (Eczema) இது மருந்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறிய தாவரங்கலின் மருத்துவக் குணங்கள் விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை எனினும், காலாகாலமாக மக்கள் இவற்றை தமது அன்றாட வாழ்வில்ந ம்பிக்கையுடன் பயன்படுத்தி வந்துள்ளனர். காலப்போக்கில் எமது அன்றாட வாழ்வில் அதிகம் காணமுடியாத இனங்களாக இவை மாறிவரும் நிலையில் அழகுக்காகவேனும் ஏன் பயன்படுத்தக் கூடாது? -RoarRead More


மயில்கொன்றை

மயில் கொன்றை மயிலின் கொண்டை போலப் பூ இருப்பதால் இப் பெயர் ; ‘கொண்டை’, ‘கொன்றை’ ஆனது; பூக்கள் கொள்ளைஅழகு தருபவை; விதை ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது; இலைக் கசாயம் காய்ச்சலுக்கு மருந்து;டி.பி. எனப்படும் காச நோய்க்கு இத் தாவரம் மருந்தாகப் பயன்படுகிறது. செம்மயில் கொன்றை பூக்களுக்கு செசல்பீனியா புல்செரிமா என்று தாவர பெயரில் குறிப்பிடுகின்றனர். கொன்றை மலர் மரங்களை நாம் அன்றாடம் பயணம் செய்யும் சாலை ஓரங்களிலும், தெருக்களிலும், பூங்காக்களிலும் ஏராளமாக காணலாம். கொன்றை மரங்கள் எல்லா இடங்களிலும் மிகவும் சாதாரணமாக காணக் கிடைக்கக் கூடிய தாவரமாகும். இந்த பூக்கள் மஞ்சள் நிறம் கலந்து சிவப்பு நிறத்தில் காணப்படும். இந்த பூக்கள் முதிர்ந்து அவரை காய்களைப் போன்ற காய்களை உருவாக்குகிறது. இதே மயில் கொன்றை பூக்கள் மஞ்சள் நிறத்திலும் பூக்கின்றன. இதனால் சிவப்பு மயில் கொன்றை என்றும், மஞ்சள்Read More


பூ பூக்காமல் வரும் பழம்

அத்தி பூத்த மாதிரி என்று சொல்வார்கள். அப்ப அத்திப் பழங்கள் எப்படிக் கிடைத்-திருக்கின்றன என்றெல்லாம் சந்தேகம் எழும்பும். ஒரு மரம் பூக்காமல் காய் ஏது கனி ஏது. அத்தி மரமும் பூக்கத்தான் செய்கிறது. அந்தப் பூக்கள் நம் பார்வைக்குத் தெரிவதில்லை. கேலிக்ஸ் எனப்படும் அதன் பச்சை நிறக் காம்புப் பகுதிக்கு உள்ளேயே பூ பாகம் மறைந்து கொள்வதால் பூக்கள் நம் பார்வைக்குத் தட்டுப்படுவதற்குள் பூவின் சூல் பையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு ஒரு அவசரத்துக்கு உட்பட்டு காயாகி பின் கனியாகி இலைகளுக்கு மேல் எட்டிப் பார்க்கிறது. நமது பார்வைக்குக் கிடைப்பவை இந்தக் கனிகள்தான். அத்தி மரம்தான் இப்படியென்று இல்லை. அரச மரங்களிலும், ஆல மரங்களிலும் கூட நாம் பூக்களைப் பார்க்க முடியாது. நேரடியாய் நமக்குக் கிடைப்பவை பழங்கள்தான். periyarpinju


இரவில் நல்ல தூக்கத்தைப் பெற படுக்கை அறையில் வைக்க வேண்டிய 5 செடிகள்

வீட்டுத் தாவரங்கள் உங்கள் வீட்டிலுள்ள காற்றை தூய்மைப்படுத்தி, ஆக்சிஜெனை வழங்கும். மேலும் உங்கள் வீட்டிற்கு அவைகள் வண்ணம் சேர்க்கும் வகையிலும், உயிரோட்டத்தையும் அளிக்கும். அதனால் நம் படுக்கையறைக்கு நாம் தேர்வு செய்யும் சரியான செடிகள் உங்களை ஆசுவாசப்படுத்தி ஒரு அருமையான இரவை அமைத்துக் கொடுக்கும். இவ்வகை செடிகளை நீங்கள் தேர்ந்தெடுக்க மிகப்பெரிய பட்டியலே உள்ளது. அவற்றில் பல வகை செடிகள் பொதுவாக புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. இதனை படிப்பதன் மூலம் அவ்வகை செடிகளில் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அவற்றை உங்கள் வீட்டிற்கும், படுக்கையறைக்கும் கொண்டு வாருங்கள். இங்கு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், நன்றாக தூக்கம் வருவதை உறுதி செய்யவும் உதவியாக விளங்கும் 5 செடிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. மல்லிகை (Jasmine) வீலிங் ஜெஸ்யுட் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில் மல்லிகை இயற்கையாக உறக்கத்தை ஏற்படுத்த உதவும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. தரமானRead More