Farmer

 
 

விவசாயிங்க..சாவுங்கப்பா..அப்பத்தான்..

கருகிய பயிர்களை கண்டு மனம் தாளாமல் ஒரே நாளில் 5 விவசாயிகள் பலி..அங்கு பலி. இங்கு பலி என தமிழகத்தில் ஏறக்குறைய 60 விவசாயிகள் மாண்டுபோயிருக்கின்றனர்.. தொழில் வளம், வர்த்தகம் ஆகியவற்றின்மீது காட்டப்ப டும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு அக்கறை காட்டினாலே போதும்.. இத்தகைய அவலங்களை தவிர்க்க.. நீர் மேலாண்மை என்கிற முக்கியமான விஷயம் இங்கே ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம். குறைந்தபட்சம், மூன்று வேளை நாம் சாப்பிடும் சாப்பாடு செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளால்தான் என்பதை நினைத்துக்கூட பார்ப்பத்தில்லை..அவர்கள் பிரச்சினைகளையும் கேட்பதில்லை…அந்த அளவுக்கு நன்றி கெட்டுப்போயுள்ளது நம் புத்தி.. மக்கள் எவ்வழி,, அரசும் அவ்வழி..ஆற்று மணல் கொள்ளை என்கிற பயங்கரம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுடுகாடாக்கப்போகிறது என்பது ஆட்சி பொறுப்பில் உள்ளவர்களுக்கு உரைக்கவேபோவதில்லை.. விவசாயிகள் படிப்படியாக சாகட்டும்..அப்போதுதான் நன்றி கெட்டவர்களின் பிந்தைய தலைமுறையும் சாப்பிட வழியில்லாமல்Read More


கடவுள் கண்ட தொழிலாளி – விவசாயி

லாபகரமாக மாறுமா வேளாண் தொழில்? இன்று உலக விவசாயிகள் தினம் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும். ஆனால் எத்தனை பேர் அதைப் புரிந்து வைத்திருக்கின்றனர்? குறிப்பாக நெல் தானிய மகசூல் கூட எதிர்காலத்தில் குறைந்து வரும் அவலம்தான் காணப்படுகிறது. நெல் விளைச்சலுக்கு முன் உள்ள பிரச்னைகள் நீர்ப் பற்றாக்குறை, பொய்த்து போகும் மழை அல்லது கூடுதல் மழைப்பொழிவு, காலநிலை மாறுதல், பயிர் விளைச்சல் சீர்குலைதல், பூச்சிகள் தாக்குதல்… எனப் பல்வேறு இன்னல்களை தாண்டித்தான் ஒவ்வொரு விவசாயியின் உழைப்பும் இருந்து வருகிறது. நெல் விளைச்சலுக்கு பின் நிலவும் பிரச்னைகளைச் சந்திக்கும்போது, விவசாயிகள் நொந்து நூலாகி விடுகின்றனர். வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள் படும் பாட்டுக்கு உரிய மதிப்பை யாரும் தருவதில்லை. இந்த பிரச்னைகள் ஒரு பக்கம் இருந்து வந்தாலும்,வளர்ந்து வரும் நமதுRead More


நாளைய தலைமுறைக்கு எச்சரிக்கை மணி

நாகை கீழையூரில் பயிர் கருகியதை கண்டு விவசாயி மாரிமுத்து உயிரிழந்தார். நேற்று உயிரிழந்த நண்பர் ராஜ்குமாரின் இறுதிசடங்கில் பங்கேற்று திரும்பியாவர் இன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. நாகை மாவட்டத்தில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதை கண்டு அதிர்ச்சியடைந்து தற்கொலை கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊருக்கே சோறு போடும், விவசாயி தனக்கே சோறு இல்லாமல் உயிர் இழப்பது மனித நேயம் கொண்ட ஒவ்வொருவரையும் மனம் நொந்து கண் கலங்க செய்கிறது. நேற்று கீழையூர் விவசாயி ராஜ்குமார், இன்று விவசாயி மாரிமுத்து என்று விவசாயிகள் தற்கொலை நீண்ட கொண்டே போய்கிறது. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் பலர் இன்று கடன்களில் தத்தெடுப்பதும், வேறு தொழிலை நாடி செல்லும் செய்தியாக தினந்தோறும் வெளிவருகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயம் அழிவது மட்டுமின்றி விவசாயிகளும் அழிந்து வருவது நாளையRead More