Ennore

 
 

கடலில் எண்ணெய் கொட்டியது விபத்து அல்ல- ஐஐடி அறிக்கை

சென்னை: சென்னை துறைமுகத்துக்கு அருகே 2 கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு மிக மோசமான (தீவிரமான) விளைவுகளை ஏற்படுத்தும் என்று சென்னை ஐஐடி அறிக்கை தெரிவிக்கிறது. கடலில் எண்ணெய் கொட்டியது விபத்து அல்ல என்றும், அது சுற்றுச்சூழலுக்கு எதிரான பேரிடர் என்றும் ஐஐடி சென்னை கூறியுள்ளது. சென்னை துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28ம் தேதி இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதில் கடலில்  எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அதனை அகற்றும் பணிகள் தற்போது நிறைவடைந்துவிட்டாலும், எண்ணெய் கசிவு காரணமாக மிக மோசமான (தீவிரமான) விளைவுகள் ஏற்படும் என்று சம்பவம் நடந்த 3வது நாளே சென்னை ஐஐடி அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீண்ட நாள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியின் சுற்றுச்Read More