EELAM

 
 

EELAM

கார் ஒன்று மறிக்கப்படுகிறது.  அந்த இடங்களில் ஏனைய கார்கள் எரிந்துகொண்டிருக்கின்றன.  மறிக்கப்பட்ட கார் தமிழருடையது. உள்ளே ஒரு குடும்பம், கணவன் மனைவி நான்கு ஐந்து வயதான ஆண் பெண் என இரு பிள்ளைகள். லீட்டர் கணக்கில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பெட்ரோல் கார் முழுவதும் ஊற்றப்படுகிறது. அந்நேரம் அந்தக் காடையர் கும்பலிலிருந்த ஒருவன் சட்டென கதவைத்திறந்து இரண்டு பிள்ளைகளையும் பிடித்து வெளியே இழுக்கிறான். தாயையும் தந்தையையும் இறுக பற்றியிருந்த பிள்ளைகள் பிடித்தபிடி விடாமல் மரண ஓலம் எழுப்புகின்றனர். அதற்குள் ஒருவன் தீப்பெட்டியை உரசிக் கொள்ளவே கார் தீப்பிடித்து எரிகிறது. காடையனின் முரட்டுப் பிடியால் பிள்ளைகள் இருவரும் வெளியே இழுத்து விடப்பட்டனர்.  கொழுந்துவிட்டு எரியும் காரின் உள்ளே உயர் வெப்பத்தில் தாயும் தந்தையும் கதறுகின்றனர். காடையர்களுக்கு இது ஒரு சாதாரண சந்தோசம்மிக்க சம்பவம்.  தமிழனை அழித்துவிட்ட மகிழ்ச்சிப் பெருக்கில்Read More