Dr

 
 

மருந்து சீட்டுகளை கைகளால் எழுத டாக்டர்களுக்கு தடை

தாகா : வங்கதேசத்தில், டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் எழுதி கொடுக்கும் மருந்துகளின் பெயர்கள் என்னவென்றே தெரியாத அளவிற்கு அவர்களின் கையெழுத்து உள்ளது. இதனால் மருந்து கடைக்காரர்களுக்கும் மருந்துகளின் பெயர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து வங்கதேச கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‛இனி டாக்டர்கள் மருந்து சீட்டுகளில் தங்கள் கைகளால் எழுதக்கூடாது. மருந்து விவரங்களை டைப் அடித்து கொடுக்க வேண்டும்.அதையும் மீறி எழுத வேண்டிய கட்டாயம் இருந்தால் மருந்து விவரங்களை ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளாக எழுத வேண்டும்’ என்று உத்தரவிட்டார். மேலும் சுகாதார துறையினர் இதை கண்காணித்து 3 மாதத்துக்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்Read More


புதிய ஆப்ஸ் – அம்பேத்கர் பெயர் – மோடி

‘உங்கள் பெருவிரல் தான் இனி உங்கள் பேங்க்’…புதிய ‘பீம் ஆப்ஸை’ அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியாகி 50-வது நாளான நேற்று, டிஜிட்டல்பேமெண்ட்டை ஊக்கப்படுத்தும் வகையில், ‘பிம்’(BHIM) என்ற செயலியை(ஆப்ஸ்) பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்தார். ரூபாய் தடை நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டை ஒழிக்கும் வகையில், கடந்த நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அந்த அறிவிப்பினால், கடந்த 50 நாட்களாக மக்கள் பணத்தட்டுப்பாட்டால் பல இன்னல்களை சந்தித்தனர். பரிசுகள் அதேசமயம், சாமானிய மக்கள் முதல் அனைவரும் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற வேண்டும் என மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. டிஜிட்டல் பரிமாற்றம் மேற்கொள்ளும் மக்களுக்கு நாள்தோறும் பரிசும், வர்த்தகர்களுக்கு வாரந்தோறும்பரிசுத்திட்டத்தை கடந்த வாரம் வெளியிட்டது. புதிய செயலி இந்நிலையில், டிஜிட்டல் பேமெண்ட்ைடRead More


‘மக்கள் டாக்டர்’ மறைந்தார்

கோவையில் 20 ஆண்டுகளுகளுக்கும் மேலாக 20 ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்று, மருத்துவம் பார்த்து வந்த ‘மக்கள் டாக்டர்’ என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் நேற்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 67. அவரது கிளினிக் முன்பாக பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கோவையில் ஏழை எளிய மக்களின் குடும்ப மருத்துவராக திகழ்ந்த ‘’20 டாக்டர்” என்று மக்களால் அழைக்கப்படுபவர் மக்கள் மருத்துவர் பாலசுப்பிரமணியம். இவர் கோவை, ஆவாரம்பாளையம் சாலையில் கிளினிக் நடத்தி வந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். மருத்துவம் பார்க்க தன்னிடம் வரும் ஏழை, எளிய மக்களிடம் கட்டணமாக வெறும் 20 ரூபாய் மட்டுமே வசூல் செய்வதால் இவரை ஆவாரம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் ”20 ரூபாய் டாக்டர்” என்றே அழைப்பார்கள். இவர் திடீரெனRead More


நாட்டிற்காக தன் தாய்மையை துறந்த பெண்

இந்தியாவின் ஒரே பெண் கமாண்டோ பயிற்சியாளர், தீயணைப்பு வீரர், படத் தயாரிப்பாளர், ஸ்கூபா டைவர் மற்றும் மாடல் போன்ற பன்முகத் திறமைக்குச் சொந்தக்காரர் டாக்டர் சீமாராவ். மிகத் தைரியசாலியும், மாறுபட்ட திற மைகளை கொண்ட சீமாராவ், எந்தவித பிரதிபலனுமின்றி கடந்த 20 வருடங்களாக கமாண்டோ படை வீரர்களுக்கு பயிற்சி அளித்துவரும் ஒரே பெண் பயிற்சியாளர்.இதோடு முடியவில்லை இவரது திறமைகளின் பட்டியல். ராணுவ தற்காப்புக் கலையில் 7வது நிலை பிளாக் பெல்ட் வைத்திருப்பவர், போர் துப்பாக்கிச்சூடு பயிற்சியாளர், பாறை ஏற்றத்தில் பதக்கம் வென்றவர் மற்றும் மிஸஸ் இந்தியா, மிஸஸ் வேர்ல்டின் இறுதிப் போட்டியாளர் என பட்டியல் நீள்கிறது. பலசாலியான சீமா, உலகின் ஜீத் குனேடோ என்னும் தற்காப்புக் கலையில் தேர்ந்தவர்களில் ஒருவரும், அந்தக் கலையை பயிற்றுவிக்கும் அதிகாரத்தையும் பெற்றவர். மரபுவழி மருத்துவம் மற்றும் மேலாண்மை பட்டதாரியான தான் படிப்பிலும்Read More