Diwali

 
 

தீபாவளி அன்று அதிகாலையில் நீராடுவது எதற்கு?

எல்லா நாட்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னால், அதாவது விடியல் வேளையில் எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது என்று கூறும் அறநூல்கள் தீபாவளி நாளில் மட்டும் விடியல் வேளையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்று கூறுகின்றன. தீபாவளி அன்று அதிகாலையில் நீராடுவது எதற்கு? நரகாசுரன் மறைந்த நாள் ஐப்பசி மாதம், அமாவாசைக்கு முதல் நாளாகிய சதுர்த்தசி பொருந்திய விடியல் வேளையாகும். அந்த அசுரன் இறப்பதற்கு முன் நல்அறிவு பெற்று தான் உயிர்விடும் இத்திருநாளில் எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தி, கடவுளை வழிபடுபவர்களுக்கு பாவங்களை தவிர்த்து அனைத்து நன்மைகளையும் செய்து தருமாறு இறைவனிடம் வேண்டினான். இறைவனும் அருளினார். தீயது அழிந்த நாளாக நல்லது தொடங்கும் நாளாக, இருள் நீங்கி ஒளிபிறக்கும் நாளாகவும், தீபாவளி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து தேவர்களும் எல்லா அம்சங்களிலும் நிறைந்து வேண்டிய வரம் தருவார்Read More


‘ப்ளீஸ்… ஓ.சி. பட்டாசு கேட்டு வராதீங்க…’

‘ப்ளீஸ்… ஓ.சி. பட்டாசு கேட்டு வராதீங்க…’ – அரசு அதிகாரிகளிடம் பட்டாசு ஆலை அதிபர்கள் ‘கெஞ்சல்’! விருதுநகர்: “சீனா பட்டாசு வருகையால் சிவகாசி பட்டாசுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஓ.சி. பட்டாசு கேட்டு வராதீங்க!” என்று அரசு துறையினருக்கு ‘பொட்டில் அறைந்தது மாதிரி’ பட்டாசு ஆலை அதிபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவகாசி மற்றும் அதைச் சுற்றி ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக பட்டாசு தொழில் விளங்கி வருகிறது. சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள்,  தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மொத்தத்தில் இந்தியாவில் 80 சதவீதம் பட்டாசு உற்பத்தி சிவகாசியில்தான் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் சென்னை தலைமைச்செயலகம் உள்பட பல்வேறு இடங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு சிவகாசி பட்டாசு ஆலைகளில்Read More