deepa

 
 

ஜெயலலிதா இடத்தில் யார்? -ஜூவி கருத்துகணிப்பு

ஜெயலலிதா இடத்தில் யார்? – தீபா 31.68%, ஓபிஎஸ் 15.56%, சசிகலா 4.58% – ஜூனியர் விகடன் சர்வே ஜெயலலிதா இடத்தில் தீபாவே பொருத்தமாக இருப்பார் என்று 31.68 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர். ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. சென்னை: தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்குப் பின்னர் முதல்வராக பதவியேற்றுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். போயஸ்தோட்டத்தில் இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சி, ஆட்சி தலைமை ஒருவரிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கூறி வருகின்றனர். நிர்வாகிகளின் விருப்பத்தின் படி சசிகலா விரைவில் முதல்வர் ஆவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சசிகலாவிற்கு மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது? ஜெயலலிதா இடத்தில் யார்Read More


தந்தி டிவியில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேட்டி