எது உங்களை தடுக்கிறது?

இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு வழக்கமான நாளில்தான், அந்த லாரி என் மீது மோதி, கால்கள் சிதைந்தது. ஓட்டுனர் மீது எந்த தவறும் இல்லை, அருகிலிருந்த தூண் மறைத்துக் கொண்டிருந்ததால் அவரால் நான் வருவதை கண்டுகொள்ள முடியவில்லை. அந்த பரபரப்பான காலை வேளையிலும் சுற்றி இருந்தவர்கள் என்னை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மணி 9.30 இருக்கலாம். மாலை 5.30 மணிக்கு காலில் அறுவைசிகிச்சை நடந்தது. டாக்டர்கள் முடிந்தவரை என் கால்களை காப்பாற்ற முயற்சித்தனர், …

More