CM

 
 

குடியரசு தினத்தில் முதல்முறையாக கொடியேற்றும் முதலமைச்சர்

நாட்டின் 68-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றுவார்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தினத்தன்று காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர்ராவ் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பதால் நாளை குடியரசு தினவிழாவில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கொடியேற்றுவார்‌ எனக் கூறப்படுகிறது. தமிழகத்திற்கு கூடுதல் பொறுப்பில் இருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிராவில் கொடியேற்ற வேண்டியிருப்பதால் தமிழகத்தில் முதன்முறையாக குடியரசு தினத்தன்று ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் கொடியேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்ச‌ராக பதவியேற்ற பிறகு தேசியக் கொடியேற்றுவதும் இதுவே முதல்முறையாகும்.


சசிகலா வாழ்த்து எனக்கு தேவையில்லை – பன்னீர். பிறந்தநாளில் அதிரடி

பிறந்த நாளுக்கு தன்னிடம் ஆசிப் பெறுவதற்காக, முதல்வர் பன்னீர்செல்வம் வருவார் என எதிர்பார்த்த சசிகலா, கடும் அதிருப்தியில் இரவு வரை காத்திருந்தார். ஆனால், கடைசி வரை பன்னீர்செல்வம் வரவில்லை. அதனால், இரவு 9:00 மணிக்கு மேல், வாழ்த்து செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பிரதமர் மோடியும்; தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், பன்னீர்செல்வத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிவிட, வேறு வழியில்லாமல், தாமதமாக வாழ்த்து செய்தி அனுப்பினார் சசிகலா. இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது:சசிகலாவின் விருப்பம் இல்லாமல், மத்திய அரசின் ஆசியோடு, ஜெயலலிதா மறைவுக்குப் பின், மூன்றாவது முறையாக தமிழக முதல்வரானார் பன்னீர்செல்வம். துவக்கத்தில் இருந்தே, தன்னிச்சையாக செயல்படத் துவங்கி உள்ள, பன்னீர்செல்வம் சசிகலாவை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.இருந்த போதும், தனக்கான செல்வாக்கைப் பயன்படுத்தி, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக, கட்சிப் பொதுக் குழு மூலம்Read More


ஜெயலலிதாவின் சமாதிக்குள் விழுந்த செல்போன்

ஜெயலலிதாவின் சமாதிக்குள் தம்முடைய செல்போன் விழுந்துவிட்டதாக பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஜெ.வின் பூத உடல் அடங்கிய சந்தனப்பேழை குழிக்குள் இறக்கப்பட்டது. அப்போது விஐபிக்கள் சந்தனக் கட்டைகளை அந்த குழியில் போட்டு அஞ்சலி செலுத்தினர். சசிகலாவின் கணவர் நடராஜனுடன் இருந்த பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரியும் சந்தனக் கட்டைகளை உள்ளே போட்டுக் கொண்டிருந்தார். திடீரென அவரது கையில் இருந்த செல்போனும் சந்தனப்பேழை இறக்கப்பட்ட குழியில் விழுந்துவிட்டது. இச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் “அம்மாவின் சமாதிக்குள் என் போன்” என ஜூவி செய்தியை சுட்டிக்காட்டி பதிவு செய்திருக்கிறார் ஆசீர்வாதம் ஆச்சாரி.


ஒரு மாநிலத்தின் முதல்வர் மரணம் அடைந்தால் …

ஒரு மாநிலத்தின் முதல்வர் மரணம் அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் Indian constutional law சில அறிவுறுத்தல்கள் இருக்கின்றன… இது சட்டம் ஒழுங்கு சம்மந்த பட்ட விஷயம்…ஒரு மாநில முதல்வர் இறப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அந்த மாநில ஆளுனர் அதை உறுதி செய்ய வேண்டும், பின் அந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும் , பிரதமர் அந்த தகவலை குடியரசு தலைவருக்கு தெரியப்படித்துவர், மத்திய அரசின் வழிகாட்டுதலோடு புதிய பொறுப்பு முதல்வரை தேர்ந்தடுத்து , மாநில சட்டம் ஒழுங்கை உறுதி செய்துக்கொண்ட பிறகு மத்திய அரசின் அனுமதியோடு நடு இரவு அல்லது வெடியற்காலை ஆளுநர் முறையாக தகவலை மக்களுக்கும் ஊடகத்திற்கும் சொல்லுவார்… இது தான் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் மறைவின் பொழுது நடந்தது…. Needsraja