Child care

 
 

மழைக்காலம்: குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு

மழைக்காலம்: குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை… தவிர்க்க வேண்டியவை மழைக்காலம் கோடை வெப்பத்தின் தாக்கத்தை அனுபவிக்கும் நாம், மழை எப்போது வரும் என அதன் குளிர்ச்சியை அனுபவிக்க ஆர்வமாக இருப்போம். அதே நேரம், மழை மற்றும் பனிக்காலத்தில் சில வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் ஜுரம், இருமல், ஜலதோஷம், வரட்சியான தொண்டை, வயிறு சம்பந்தமான பிரச்னைகள் உண்டாக்கக்கூடும். குழந்தைகளுக்கு தேர்வுக் காலமும் வருவதால், உடல் தொந்தரவும் பரீட்சைக்காக படிக்கவேண்டுமே என்கிற பதட்டமும் சேர்ந்து குழந்தைகளைப் பயமுறுத்தும். எனவே, இயற்கையான உணவுகளை எடுத்துக்கொண்டால், நோய்க் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலைப் பெறலாம். குழந்தைகளின் நலனுக்காக பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன என்பது பற்றி விளக்குகிறார், குழந்தைகள் நல மருத்துவர் என்.அரவிந்த் பாபு. குழந்தைகளுக்கு, எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கக்கூடிய உணவுகளையும், பழ சாலட், சூப் வகைகள், வைட்டமின் சத்துக்கள் அதிகம் தரும் பழச்சாறுகளையும் கொடுக்கவும்.Read More