Chief Minister

 
 

தமிழகத்தின் முதல்வர் சசிகலா…விரைவில்

முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் போயஸ் இல்லம் சென்று சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மாறி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என்று இன்று மக்களவை துணை சபாநாயகருக்கான லேட்டர்பேடில் தம்பிதுரை அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் போயஸ் கார்டன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சந்திப்பு இன்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை, திருவள்ளுவர் மாவட்ட செயலாளர்களும் சசிகலாவை சந்தித்து வருகின்றனர். தமிழகத்தின் முதல்வர் சசிகலா என்ற அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


சசி போயஸ்சில் இருந்து நீயே வெளியேறு…! இல்ல…. முதல்வா் ஓ.பி.எஸ்..!!!

சசி போயஸ்சில் இருந்து நீயே வெளியேறு…! இல்ல நானே வெளியேற்றுவேன்..!! அதிரடி முதல்வா் ஓ.பி.எஸ்..!!! சந்தியா தேவி, தன் மகள் ஜெயலலிதாவின் பெயருக்கு போயஸ் தோட்ட இல்லத்தை 1.11.1971 நாளிட்ட உயிலின் மூலம் எழுதி வைத்தார். அதன் பின்னர் தொடர்ந்து ஜெயலலிதா வசம் அந்த வீடு வந்தது. ஜெயலலிதா அரசியலுக்கு நுழைந்தபின், அதிகாரத்தின் சின்னமாகவே அந்த வீடு மாறிப் போனது. இப்படிப்பட்ட ஓர் அதிகாரத்தின் பீடத்தில்தான் சசிகலா தற்போது இருந்து வருகிறார். இடைத்தேர்தலில் பொதுச் செயலாளரின் சார்பில் கையெழுத்திட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவின் விரல் ரேகை வைக்கப்பட்டே படிவம் பூர்த்தி செய்யப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் ஜெயலலிதா ஒரு விரிவான உயில் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் இல்லை. நேரடி வாரிசுகள் இல்லாத நிலையில், அந்த சொத்துக்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும்Read More


ஒரு மாநிலத்தின் முதல்வர் மரணம் அடைந்தால் …

ஒரு மாநிலத்தின் முதல்வர் மரணம் அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் Indian constutional law சில அறிவுறுத்தல்கள் இருக்கின்றன… இது சட்டம் ஒழுங்கு சம்மந்த பட்ட விஷயம்…ஒரு மாநில முதல்வர் இறப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அந்த மாநில ஆளுனர் அதை உறுதி செய்ய வேண்டும், பின் அந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும் , பிரதமர் அந்த தகவலை குடியரசு தலைவருக்கு தெரியப்படித்துவர், மத்திய அரசின் வழிகாட்டுதலோடு புதிய பொறுப்பு முதல்வரை தேர்ந்தடுத்து , மாநில சட்டம் ஒழுங்கை உறுதி செய்துக்கொண்ட பிறகு மத்திய அரசின் அனுமதியோடு நடு இரவு அல்லது வெடியற்காலை ஆளுநர் முறையாக தகவலை மக்களுக்கும் ஊடகத்திற்கும் சொல்லுவார்… இது தான் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர் மறைவின் பொழுது நடந்தது…. Needsraja


தன்னை இகழ்ந்து பிறரை புகழும் குணம்

ஒருநாள் காமராஜ் அவர்கள், சட்டமன்றத்தக்கு செல்லும்போது மேல்தளத்துக்கு செல்ல மின்தூக்கியில் (லிப்ட்)சென்றார். அப்போது கண்ணீருடன் மனுவை கொடுத்தார் லிப்ட்டில் பணிபுரிபவர்.வாங்கி சட்டைபையில் வைத்துக்கொண்டு என்ன..என்று கேட்டார். அதற்கு அவர்,ஐயா தொழில்துறையிலிருந்து அரசானை வந்திருக்கிறது, பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் மட்டுமே.. பணியில் இருப்பார்களாம்…, கவலையோடு சொன்னவரை ,நான் பார்க்கிறேன், என்று தட்டிகொடுத்துவிட்டு, சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர் கர்ஜித்தார். ஏழையின் வயிற்றில் அடிப்போதுபோல் அரசானை பிறப்பித்தது யார்.பொத்தானை அழுத்தினால் மேல போவதற்கும்,பொத்தானை அழுத்தினால் கீழே வருவதற்கும்,பத்தாவது வரை படிக்கனுமா, அப்படியென்றால் நான் எட்டாம்வகுப்புவரை தானேன படிச்சிருக்கேன்…எனக்கு அந்த லிப்ட துடைக்கிற வேலைகூட கிடைக்காதே… என்று குரல் உயர்த்தியதும் வாயடைத்து போனார்கள் அதிகாரிகள். தன்னை இகழ்ந்து பிறரை புகழும் குணம்,உயர்ந்த மனிதர்களிடம் மட்டுமே காணப்படும் நாமும் முயற்ச்சிப்போமா…


நள்ளிரவு பூஜை

திருவல்லிக்கேனியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோயிலில் நள்ளிரவில் விதிகளை மீறி ஜெயலலிதாவுக்காக பூஜை நடத்தப்பட்ட காட்சிகள் புகைப்படமாக வெளியாகியுள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் நேற்று முன்தினம் இரவு மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. அதிகாலை சுமார் 1 மணியளவில் TN 04-AM 5 என்ற எண் கொண்ட லேன்சர் கார், TN20-CU2277 என்ற எண் கொண்ட காரும் கோயில் முன் வந்து நின்றது. அதிலிருந்து, சில மன்னார்குடி முக்கிய பிரமுகர்களும் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடரும் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோயிலின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர். ஜெயலலிதா நலமடைந்தால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு பூஜை நடத்துவதாக சசிகலா நடராஜன் வேண்டிக்கொண்டார். அந்த வேண்டுதலை நிறைவேற்றவும் காணிக்கைகள் செலுத்தவும்தான் சசிகலாவுக்கு வேண்டிய பிரமுகர்கள் நள்ளிரவில் திருவல்லிகேணி கோவிலுக்கு சென்றுள்ளனர். கோயிலின் வாசலில் கார் நிற்பதும்,Read More


முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரணமாக குணமடைந்துவிட்டார். மிகவும் நலமாக உள்ளார் என்று அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் பிரதாப் ரெட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகவும் நலமாக உள்ளார். வழக்கமான உணவுகளையே உட்கொண்டு வருகிறார். செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுவிட்டது. இயற்கையாகவே அவர் சுவாசித்து வருகிறார். அவர் விரும்பும் போது வீட்டிற்கு செல்லலாம். தொற்று மீண்டும் ஏற்படாமல் இருக்கவே, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.