Banyan tree

 
 

ஆலமரத்தைக் காப்பாற்றிய கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் செரையாம் பாளையம் கிராமத்தில் பலநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அந்த ஊரில் மிகவும் பிரபலமான இந்த ஆலமரத்தில், ஆண்டுதோறும் வரும் ஆடி மாதம் முழுவதும் ஊர்மக்கள் திரண்டு பொங்கல் வைத்து மரவழிபாடு செய்வது வழக்கம். ஆனால், திடீர் என்று வந்தது அந்த ஆலமரத்துக்கு ஒரு சோதனை. இந்த ஊர் வழியாக கொண்டுசெல்லப்படும் உயர் அழுத்த மின்பாதை கோபுரம் (டவர் லைன்) அமைக்க , இந்த ஆலமரம் இடைஞ்சலாக இருப்பதாக கூறியது மின்சார வாரியம். அத்துடன் அதை அடியோடுப் பிடுங்கி எரிய பொக்லைன் இயந்திரத்தோடு கிளம்பி வர, ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், விழித்துக்கொண்ட கிராம மக்கள் ஆலமரத்தைக்காப்பாற்ற நூதன முறையில் போராடத் துவங்கினர். செரையாம் பாளையம் கிராமத்தைச்சேர்ந்த குழந்தைகள்,பெண்கள், ஆண்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி,Read More