anbumani Ramadoss

 
 

ஜெ. பாரத ரத்னா விருதுக்கு தகுதியானவர் அல்ல: அன்புமணி

பாமகவின் இளைஞர் அணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்கக் கோரியுள்ள தமிழக அரசின் வேண்டுகோளைக் கடுமையாக எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அன்புமணி அளித்த சிறப்புப் பேட்டியில், தமிழக அரசு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. ஆனால் விருதைப் பெற அவர் தகுதியானவர் இல்லை. ஜெயலலிதா 15 ஊழல் வழக்குகளைச் சந்தித்தவர். . வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகக் கூறப்பட்ட நிலையில் அவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கான மேல்முறையீட்டுத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. சிறையில் தன்னுடைய நாட்களைக் கழித்த ஒரே முதலமைச்சர் அவர்தான்.                      ஜெயலலிதா  Read More