மிரண்டது காளை; அரண்டது போலீஸ்  

 மதுரை: பாலமேட்டில் கோவிலுக்கு அழைத்து வரப்பட்ட காளைகள் மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட் தடை காரணமாக மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுக்கு காளைகளை விட வேண்டாம் என உரிமையாளர்களிடம் போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில், அங்கு உள்ளூர் மக்கள் குவிந்தனர். மேலும், வெளியூரிலிருந்து வந்த ஆயிரகணக்கான மக்களும் குவிந்திருந்தனர். ஜல்லிக்கட்டுக்கு தடையை கண்டித்து பாலமேட்டில் கடைகளில் கருப்பு கொடி கட்டப்பட்டு, முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. …

More

இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் .. சொல்வது சாமி

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து மாடுகள் விரைவில் நீக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் …

More