500

 
 

இதுவரை ஒழிக்கப்பட்ட கரன்சிகள்

புதுடெல்லி, -இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பம் பல முறை இது போன்று கரன்சிகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கி வெளியிட்டதிலேயே அதிக மதிப்பு கொண்ட ரூ.10 ஆயிரத்திற்கான கரன்சி கடந்த 1938 மற்றும் 1954ம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. பின்னர் இந்த நோட்டுகள் கடந்த 1978ம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்டன. அதே போல் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திரத்திற்கு முன்னர் அச்சடிக்கப்பட்ட ஏராளமான கரன்சிகள், நாணயங்கள் ஆகியவற்றை சுதந்திர இந்தியாவில் செல்லாது என அறிவிக்கப்பட்டன. கடந்த 1946ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு முன்பு ரூ.1,000, ரூ.10,000 மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. பின்னர், அதிக மதிப்பிலான ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 ஆகிய நோட்டுகள் 1954-இல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் கடந்தRead More