47 ஆண்டாக காமராஜர் பிறந்தநாளில் ஏழைகளுக்கு உணவளிக்கும் இருவர்

 
 

47 ஆண்டாக காமராஜர் பிறந்தநாளில் ஏழைகளுக்கு உணவளிக்கும் இருவர்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை பெரியவர்கள் இருவர் நடத்தி வருகின்றனர். விழாவில் மாணவர்களுக்குப் பரிசளிப்பு, ஏழை எளிய மக்களுக்கு உணவளிப்பு என்று தொடந்து 47 ஆண்டுகளாக செய்து வருகின்றனர். காமராஜரின் பிறந்த நாள் விழாவை கடந்த 1969 முதல் 47 வருடங்களாக சிதம்பரத்தில் தொடர்ந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர் இருவர். காமராஜரின் செயல்பாடுகளை இளைய தலைமுறையினர் அறியும்படி செய்து வருகிறார்கள். இது பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த 1969-ல் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜீவா விஸ்வநாதன் என்பவர் தின, வார இதழ்களின் முகவராக இருந்தார். அப்போது, நாத்திகம் இதழின் ஆசிரியரும் பெரியாரின் சீடருமான நாத்திகம் ராமசாமி, ‘காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், ஏழை எளிய மக்களின் கல்விக்கு பாடுபடுபவருமான காம ராஜர் பிறந்தநாளை தமிழக மக்க ளுக்கு எடுத்துரைக்கும் வகையில்Read More