3600

 
 

அடேங்கப்பா! 3600 கோடியா?

மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை நிறுவப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.சத்ரபதி சிவாஜி மராட்டிய அரசை  ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. இளம் வயதிலேயே திறமை பெற்ற போர் வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், வல்லமை பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர்.ராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டிய அரசு விரிவடைய வித்திட்டவர். பிரமாண்ட சிலை மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்கிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் புகழை உலகறிய செய்யும் வகையில் மராட்டிய அரசு மும்பை அரபிக்கடலில் அவருக்கு மிக உயரமான சிலை மற்றும் நினைவு மண்டபத்தை நிறுவ உள்ளது. இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைRead More