36 வயதினிலே

 
 

நிஜத்தில் ஒரு ‘36 வயதினிலே’ ஜோதிகா

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் காய்கறிகளில் நச்சுப் பொருள் இருக்கிறது என கேரள அரசு குற்றம் சாட்டி வந்தது.  நாங்கள் அனுப்பும் காய்கறிகள் தரமானவை என தமிழக அரசும் விளக்கம் கொடுத்தும் இன்னும் சண்டைகள் ஓயவில்லை. பூச்சிக் கொல்லி இருக்கிறதா இல்லையா? என்பதெல்லாம் அரசியலாக்கப்பட்டாலும், எந்த அரசியலும் செய்யாமல் இயற்கை உணவுகளின் பக்கம் மக்களை ஈர்த்து வருகிறார் கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர். தொடர் ரெய்டுகள், அதையொட்டிய வழக்குகள் என நாள்தோறும் படு பிஸியாக இருக்கிறார். ‘காய்கறிகளுக்காக தமிழ்நாடு, கர்நாடகாவை நம்பியிருக்க வேண்டாம்’ என்று சொல்லும் இவர், ‘36 வயதினிலே’ படத்தில் ஜோதிகா சொல்லியிருப்பது போல வீட்டுக்குள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கிறார். (அந்தப் படமே மலையாள சினிமாவான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ படத்தின் ரீமேக்தான்!) அவர்… கேரள உணவுப் பாதுகாப்பு ஆணையரான அனுபமா ஐ.ஏ.எஸ்தான்.Read More