200 ரூபாய் பணத்திற்கும் ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்

 
 

200 ரூபாய் பணத்திற்கும் ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும்

200 ரூபாய் பணத்திற்கும் ஒரே ஒரு பிரியாணி பொட்டலத்திற்கும் வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில் புரட்சி எங்ஙனம் வெடிக்கும்? அயோக்கியன் என்று தெரிந்த பின்னும் அவனுக்கு ஆரத்தி எடுத்து ஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லரை பணத்திற்காக பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்? எத்தனை கொடுமைகள் இழைத்தாலும் அதனையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் மீண்டும் சின்னங்களை மட்டுமே பார்த்து வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்? படித்தவன் சூதும் பாவமும் செய்கிற சமூகத்தில் முன்னேற்றம் எந்த வழியில் வந்து சேரும்? என் அப்பா அந்தக் கட்சி… என் தாத்தா அந்தக் கட்சி … ”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவோம்” என்று அப்பன் வெட்டிய கிணற்றில் உப்புத்தண்ணீர் குடிக்கிற மகன்கள் இருக்கிற தேசத்தில் புதியRead More