2 கோட

 
 

ஒரே நாளில் 2 கோடி மரக்கன்றுகள்

ஒரே நாளில் 2 கோடி மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்துள்ள மராட்டிய அரசிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் 20 சதவீதம் வனப்பரப்பு உள்ளது. இதனை 33 சதவீதம் வரை உயர்த்த அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் நேற்று 2 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில வனத்துறை மந்திரி சுதி முகந்திவார் கூறுகையில், மேலும் 50 கோடி மரக்கன்றுகள் அடுத்த 3 ஆண்டுகளில் நடப்படும். 33 சதவீதம் வனப்பரப்பை எட்டும் முயற்சியில் மொத்தம் 400 கோடி மரக்கன்றுகள் நடப்படப்படும். இவ்வாறு அவர் கூறினார்.