இன்னும் 10 நாளில் ரூ.1,000 புதுசு..! ரூ.2,000 செல்லாது..!?

​பழைய  ரூபாய் நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1,000 செல்லாது என மத்திய அரசின் அறிவிப்பைத்தொடர்ந்து, நாடுமுழுவதும் பணத்தட்டுபாட்டில் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், புதிய ரூ.2,000 நோட்டுகள் வரும் 30ம் தேதி வரைதான் செல்லும் எனவும், ரூ1,000 புதிய நோட்டுகள் புழக்கத்தில் விடப்போவதாகவும், அதனால் பழைய ரூ2,000 நோட்டுகளை அதிகமாக வைக்காதீங்க என வாட்ஸ்அப்பில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவிவருகிறது.