​கவிஞர் வைரமுத்துவின் மருத்துவ கவிதை

மருத்துவமுறையை மாற்றுங்கள்… டாக்டர்… வாயைத்திற என்பீர்கள்! வயிறு தெரியும்படி வாய்திறப்போம்! நாக்கைநீட்டு என்பீர்கள்! கல்கத்தா காளியாய் நாக்கை நீட்டுவோம்! முதுகைத் திருப்பி மூச்சிழு என்பீர்கள்! அப்போதுதான் உண்மையாய் சுவாசிப்போம்! அவ்வளவுதான்! அஞ்சேல் என்று அருள்வாக்கு சொல்வீர்கள்! வாசிக்கமுடியாத கையெழுத்தில் வாயில் வராத பெயரெழுதி காகிதங்கிழிப்பீர்கள்! மூன்று வேளை… என்னும் தேசியகீதத்தை இரண்டே வார்த்தையில் பாடி முடிப்பீர்கள்! போதாது டாக்டர்! எங்கள்தேவை இதில்லை டாக்டர்! நோயாளி, பாமரன்! சொல்லிக்கொடுங்கள்! நோயாளி, மாணவன்! கற்றுக்கொடுங்கள்! வாய்வழி சுவாசிக்காதே! காற்றை வடிகட்டும் …

More