திண்ணைகளின் பொற்காலம்

திண்ணை வீடுகள் திண்ணை என்பது வெறும் கல்லையும் மண்ணையும் இழைத்துக் கட்டப்பட்ட உட்காருமிடம் அல்ல. அது மனித நேயத்தின் அடையாளம். திண்ணை என்பது வீட்டில் வசிப்போருக்கு மட்டும் உரியதல்ல; மழையிலும் வெயிலிலும் யாத்திரை செல்லும் தேசாந்திரிகள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் திண்ணைகளில் வீட்டாரின் அனுமதி இன்றிப் படுத்துறங்கும் பண்டாரங்களையும் பரதேசிகளையும் காணலாம். திண்ணையில் இருக்கும் அந்நியரின் பசி தீர்த்த பின்னர் தாம் புசிக்கும் நல்லோர் வாழ்ந்த காலம் அது. தெருவை மட்டுமல்ல; வாழ்க்கையையே …

More