வாழையிலை

​சமீபத்தில் சென்னையின் சாலையோர கடையொன்றில் சாப்பிட சென்றிருந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது, மதியநேரம் என்பதால் சாம்பார் சாதம், தயிர்சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி, சாப்பாடு என எல்லாம் மனக்க மனக்க இருந்தது. கடைக்காரரிடம் சாம்பார்சாதம் கொடுக்கும்படி கேட்டேன், அவரோ சிறிதுநேரம் காத்திருக்கும்படி சொன்னார், என்ன விஷயம் என கேட்டதற்கு, வாழையிலை காலியாகிவிட்டது கடையில் வேலைசெய்பவர் வாழையிலை வாங்கிவர சென்றுள்ளதாகவும், அவர் வந்தவுடன் கொடுக்கிறேன் என்றார். சாப்பிட வந்தவர்களில் ஒருவர் கேட்டார் “இப்பொழுதுதான் பிளாஸ்டிக் கவர்கள் வந்துருக்கே அதிலே …

More