‘யாகூ’ வீழ்ந்த கதை

 
 

‘யாகூ’ வீழ்ந்த கதை

இந்தியாவில் இருக்கும் அனைவரிடமும், ஆதார் கார்டு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் ஐடி இருக்கும். அவ்வளவு தூரம் கூகுள் நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு, ஜிமெயில், கூகுள் மேப்ஸ், ஹேங் அவுட்ஸ் போன்றவற்றின் மூலம் நம்மை ஆட்கொண்டு இருக்கிறது. ஏதேனும் இணையத்தில் தேட வேண்டும் என்றாலும் கூட, ‘கூகுள் செய்து பாருங்கள்’ என்றுதான் சொல்கிறோம். ஆனால், இவையெல்லாம் ஒரு காலத்தில் யாகூவிற்கு சொந்தமாய் இருந்தன. கிராமங்களில் கேபிள் கனெக்சன் என்பதை எப்படி, தனியார் சேனல் பெயர் சொல்லி அழைக்கிறார்களோ  அது போலத்தான் இணையத்தின் முகமாக யாகூ இருந்தது. பிரவுசிங் சென்டர்கள் தமிழகத்தின் பெரு நகரங்களில் மட்டும் ஆரம்பிக்கப்பட்ட காலம் அது. யாகூவில் ஐடி வைத்து இருப்பதே ஒருவித சோஷிய ஸ்டேட்டஸ்தான். “உனக்கு நான் இ மெயில் அனுப்பினேனே, வரவில்லையா” என்று கேட்டால், மீண்டும் அதை உச்சரித்துRead More