கிருஷ்ணகிரி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய பிரம்ம கமலம்!

கிருஷ்ணகிரியில், இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்திருந்ததைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. விதை, கிழங்கு, தண்டு ஆகியவற்றிலிருந்து புதியதாக முளைக்கும் தாவர வகைகளைப் பார்த்திருப்போம். பிரம்ம கமலம் என்றழைக்கப்படும் அபூர்வ மலர் வகைத் தாவரத்தின் இலையை வெட்டிவைத்தாலே, புதிதாக முளைத்துவிடும். இலையே மண்ணில் வேர்விட்டு வளர்ந்து, பிறகு தண்டுபோல செயல்படும். இலையின் பக்கவாட்டில் சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும். அதன் கணுக்களில் புதிய மொட்டுகள் உருவாகி மலர்களாய் மலரும். …

More