பஞ்சாயத்துத் தலைவி சுமதி

திருவள்ளூர் நகரம். கடும் வெயில் சுடுகிறது. தரைப் பாலம் அடியே கூவம் ஆற்றிலும் வெயில் ஊர்கிறது. நகரைத் தாண்டி 30 நிமிடங்கள் பயணம். ஒரு திருப்பத்தில் திரும்பியதும் பசுமையான வயல்கள். இடையிடையே கால்வாய்கள். பசுமை போர்த்திருக்கிறது பூமி. இனிதே வரவேற்றது அதிகத்தூர் ஊராட்சி. ஊருக்குள் நுழைந்ததும் காட்சிகள் மாறுகின்றன. நவீன பேட்டரி வாகனத்தில் சீருடைப் பணியாளர்கள் குப்பை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தெருக்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்துக்கொண்டிருந் தார்கள். படுசுத்தமாக இருக்கின்றன தெருக் கள். தெருக்கள்தோறும் காந்தி, …

More