‘நாலு பரோட்டா ஒரு ஆம்லேட் பார்சல்!’ – ஓசி கொடுக்க மறுத்த மாஸ்டரை லாடம் கட்டிய கூடல் புதூர் காவல் நிலைய காவலர் எம்.ஆர்.சாமி 

 
 

‘நாலு பரோட்டா ஒரு ஆம்லேட் பார்சல்!’ – ஓசி கொடுக்க மறுத்த மாஸ்டரை லாடம் கட்டிய கூடல் புதூர் காவல் நிலைய காவலர் எம்.ஆர்.சாமி 

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று வீதி வீதியாக விளம்பரங்கள் செய்தாலும், கடைசியில் காக்கியை கண்டாலே அதிகாரத்தில் உள்ளவர் முதல் சாமான்யன் வரை பலபேருக்கு பிடிக்காமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கடமையில் சில அதிகாரிகள் நேர்மை தவறாமல் இருக்கிறார்கள். ஆனால் சில காக்கிகள் கடமையை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்து கல்லாகட்டி வருகிறார்கள். இவர்களைப்போன்றவர்களால்தான் காவல் துறைக்கு களங்கம் உண்டாகிறது. அப்படியான ஒரு களங்கம் ஏற்படுத்தும் சம்பவம்தான் மதுரையில் நடந்திருக்கிறது. மதுரையை சேர்ந்த சோமசுந்தரம், காவல் பணியில் சேர்ந்து பின்னர் அது பிடிக்காமல், வேலையில் இருந்து வி.ஆர்.எஸ் வாங்கி விட்டு, கிங்ஸ் உணவகம் என்கிற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது கடை மதுரை கூடல்புதூரில் இயங்கி வருகிறது. இவரது மகனான கார்த்திக் என்பவர்தான், கிங்ஸ் ஹோட்டலின் பிரதான தோசை மற்றும் பரோட்டா மாஸ்டராக வேலைRead More