​திண்டுக்கல்லில் இருந்த பிரியாணியை ரூ.200 கோடி மதிப்புள்ள சர்வதேச ப்ராண்டாக உயர்த்திய தலப்பாக்கட்டி நாகசாமி தனபாலன்

திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி ஒரு சிறிய நகரத்தில் ஒரே ஒரு உணவகமாக 1957-ல் துவங்கப்பட்டது. இன்று 200 கோடி மதிப்புமிக்க ப்ராண்டாக 40 கிளைகளுடன் உலகெங்கும் செயல்படுகிறது. விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகசாமி தனபாலனுக்கு 35 வயது. எட்டு வருடங்களுக்கு முன் யூகேவில் ஒரு அலுவலகத்தில் ரிசப்ஷனிஸ்டாக பணிபுரியத் துவங்கினார். இன்று 200 கோடி வணிகத்தை நடத்தி வருகிறார். எதுவும் திட்டமிடப்பட்டு நடக்கவில்லை என்கிறார். வெளிநாட்டில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியாளராகவேண்டும் என்கிற கனவு இந்தியாவில் நிறைவேறியது. …

More