திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில்

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இந்த தலம் காவேரி வடகரையில் உள்ளது. கபிலமுனிவர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் மூலவராக உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 4வது தலம் ஆகும். தல வரலாறு கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த …

More