சென்னை விமான நிலையத்தில் 65ஆவது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து

சென்னை விமான நிலையத்தில் 65ஆவது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் காயம் அடைந்தார். பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் அடிக்கடி உடைந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று 17ஆவது நுழைவு வாயிலின் மேற்பகுதியில் உள்ள கண்ணாடி உடைந்து விழுந்தது. இதில் விமான நிலைய பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் காயம் அடைந்தார். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.