கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத்

கிரிஸ்னேஸ்வரர் கோயில் அல்லது குஷ்மேஸ்வரர் கோயில் (Grishneshwar) எனப்படும் கோயில் ஒரு புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். மகாராஷ்டிர மாநிலத்தின் அவுரங்காபாத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், எல்லோராவிலிருந்து ஒரு கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ள இக்கோயில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனிச் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலையையும் சிற்ப செதுக்கல்களையும் அளிக்கும் இக்கோயில் மகாராஷ்டிராவில் உள்ள ஐந்து ஜோதிலிங்க தலங்களில் ஒன்றாகும். இக்கோயில், சத்திரபதி சிவாஜியின் பாட்டனான மல்ரோஜி ராஜே …

More