கல்லைக் கொட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது

சென்னையில் அடையாறு, கூவம், முட்டுக்காடு, எண்ணூர் உட்பட தமிழகத்தில் 33 முகத்துவாரங்கள் இருக்கின்றன. இவைதான் சுனாமியில் இருந்து தமிழகத்தைக் காக்கும் மிகப் பெரிய அரண்கள். இந்த முகத்துவாரங்கள் வேகமாக வரும் கடல் நீரை உள்வாங்கி அலைகளைச் சாந்தப்படுத்தி மீண்டும் கடலுக்குள் கொண்டுசென்றுவிடுகின்ற பணியைச் செய்கின்றன. ஆனால், இன்று அத்தனை முகத்துவாரங்களையும் சேதப்படுத்திவிட்டு, கற்களைக் கொட்டி கடல் அலையைத் தடுக்க முற்படுகிறோம். கல்லைக் கொட்டி எல்லாம் கடல் அலைகளைத் தணிக்க முடியாது!” —நன்றி …கடல் ஆராய்ச்சியாளரான ஒடிசா பாலு,