இயற்கை விவசாயம்

லாபம் சம்பாதிக்கணும்னு உங்க ஆயுசைக் குறைச்சுக்குவீங்களா?  நம்மாழ்வார்! பொக்கிஷ பகிர்வு! ”அரவிந்தர் ஆசிரமம் பண்ணையில ஒரு பயிற்சிக்குப் போயிருந்தப்ப, அங்கே வெளிநாட்டில் இருந்து ஒரு பெண்மணி வந்திருந்தாங்க. நாள் முழுக்க பண்ணையைச் சுத்திப் பார்த்துட்டு சாப்பிட உக்காந்தாங்க. தட்டுல சாதம் வெச்சுக் குழம்பு, காய்கறின்னு பரிமாறினாங்க. எல்லாத்தையும் பார்த்தவங்க, ‘நான் சாப்பாடு கேட்டா ஏன் விஷம் தர்றீங்க’ன்னு கேட்டாங்க. எல்லாருக்கும் திக்னு தூக்கி வாரிப் போட்டுச்சு. பண்ணைக்குத் தேவையான சாமான்லாம் வாங்குற நோட்டைப் பிரிச்சு ‘யூரியா, டி.ஏ.பி, …

More