இனியேனும் முத்துக்குமார்கள் சாகாதிருக்கட்டும்

கண்ணாமூச்சி விளையாட்டில் மரணம் துரத்திக் கொண்டே இருக்கிறது… எல்லாரும் ஜாக்கிரதை… என்றேனும் பிடிபட்டே தீருவோம்”… ஆம்…ஒரு மகத்தான கவிஞனை மரணம் கொண்டே சென்றுவிட்டது. இறந்தவர்களை விட அந்த இறப்பினை காண்பவர்களுக்கே வலியும், வேதனையையும் மிஞ்சும் என்பதை உண்மையாக்கி சுற்றியிருப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலுக்குச் சென்றுவிட்டார் கவிஞர் நா.முத்துக்குமார். ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று மகள்களைக் கொண்டாடியவருக்கும் சமீபத்தில்தான் மகளொருத்தி பிறந்திருக்கிறாள். அவருடைய இறப்பிற்கு காரணமாக சொல்லப்படுவது கவிதைகளுக்கும், வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுத்த அளவிற்கு அவர் உடல்நிலைக்கு முக்கியத்துவம் …

More