‘அர்ஜுனா விருது’ அரசியலால் கொதிக்கும் அனிதா

 
 

‘அர்ஜுனா விருது’ அரசியலால் கொதிக்கும் அனிதா

நாட்டுக்காக விளையாடினால், நடுவீதியில்தான் நிறுத்துவீர்களா?’  -‘அர்ஜுனா விருது’ அரசியலால் கொதிக்கும் அனிதா. ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் திரும்பியவர்களுக்கும் மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ‘ இந்த ஆண்டாவது அர்ஜுனா விருது கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தேன். 16 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடியும் எங்களை அங்கீகரிக்க மறுப்பது ஏன்?’ எனக் கொதிக்கிறார் இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியின் கேப்டன் அனிதா பால்துரை.  சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அனிதா பால்துரை, இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியின் தவிர்க்க முடியாத வீராங்கனை. உலகின் மிகச்சிறந்த பத்து வீராங்கனைகளில் ஒருவராக 2013-ம் ஆண்டு தாய்லாந்தில் தேர்வு செய்யப்பட்டவர். எட்டு முறைக்கும் மேல் ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்காக கலந்து கொண்ட ஒரே இந்திய வீராங்கனை. கடந்த 16 ஆண்டுகளாக கூடைப்பந்துக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அனிதாவின் புரஃபைல் கொஞ்சம் நீளமானது. தொடக்கRead More