வெற்றி மொழி: வில்லியம் ஆர்தர் வார்டு

1921 ஆண்டு முதல் 1994 வரை வாழ்ந்த வில்லியம் ஆர்தர் வார்டு அமெரிக்க எழுத்தாளர். தனது ஊக்கமூட்டும் மேற்கோள்களின் மூலம் பெரும் பாராட்டினைப் பெற்றவர். மிகவும் குறிப்பிடத்தக்க அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவரது படைப்புக்களான நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. தனது இலக்கிய பங்களிப்பு மற்றும் சாதனைகளுக்காக கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் இவரது நீதிமொழிகள் புகழ்பெற்றவை.

# கடவுள் இன்று உங்களுக்கு 86,400 விநாடிகளைப் பரிசாக வழங்கியுள்ளார். இதில் ஒரு விநாடியை நன்றி சொல்ல பயன்படுத்தினீர்களா?

# உங்களால் கற்பனை செய்யமுடியும் என்றால், அதை அடையவும் முடியும். உங்களால் கனவு காணமுடியும் என்றால், அதுவாகவே மாறவும் முடியும்.

# இன்றைய நாள் மிகவும் அசாதாரண நாள். ஏனென்றால், இதற்குமுன் இன்றுபோல் நாம் வாழ்ந்ததில்லை, இதற்குப்பின் இன்றுபோல் வாழப்போவதும் இல்லை.

# சாதாரண ஆசிரியர் சொல்கிறார்; நல்ல ஆசிரியர் விளக்குகிறார்; மேம்பட்ட ஆசிரியர் நிரூபிக்கிறார்; மிக உயரிய ஆசிரியர் ஊக்கமளிக்கிறார்.

# நாம் மற்றவர்களிடம் உள்ள சிறந்ததைக் கண்டறிய முற்படும்போது, நம்மிடம் உள்ள சிறந்ததை எப்படியாவது வெளிக்கொணர வேண்டும்.

# ஒரு அன்பான புன்னகை என்பது கருணையின் உலகளாவிய மொழி ஆகிறது.

# ஆர்வம் என்பது கற்றல் என்னும் விளக்கில் உள்ள திரியினைப் போன்றது.

# மன்னிப்பு என்ற ஒன்று இல்லாமல் வாழும் வாழ்க்கை ஒரு சிறைதான்.

# மகிழ்ச்சி என்பது ஒரு உட்புற பணி ஆகும்.

# அவநம்பிக்கை புகார் செய்கின்றது; நம்பிக்கை மாற்றத்தை எதிர்பார்கின்றது; யதார்த்தம் சிக்கலை சரிசெய்கின்றது.

# சிக்கல் தற்காலிகமானது மற்றும் நேரம் சக்தியளிப்பது ஆகிய உண்மைகளை கற்றுக்கொண்டவரே விவேகமானவர்.

# வாய்ப்புகள் என்பவை சூரியோதயம் போன்றவை, நீங்கள் நீண்ட நேரம் காத்திருந்தால் அவற்றை இழக்க நேரிடும்.

Leave a Reply