சிரித்தவர்கள்

வாழ்க்கையில் சாதிக்கத் துடிப்பவர்கள் முதல் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு ஒரு நல்ல இலட்சியத்திற்காக உழைப்பவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான விஷயம் சுற்றியிருப்பவர்கள் செய்யும் கேலி.

சிலருக்கு காலம் கடந்த பிறகு ஞானோதயம் வரும். அதில் தவறே இல்லை. சாதனையாளர்கள் என்று நாம் இன்று வியக்கும் பலர் காலம் கடந்த பின்னர் ஞானோதயம் பெற்றவர்கள் தான். அப்படி தெளிவு பெற்று இலக்கை நோக்கி உழைப்பவர்களை உடனிருப்பவர்கள் கேலி செய்வதுண்டு.

உதாரணத்திற்கு ஆங்கிலத்தில் பேசிப் பழகவேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள், ப்ரோமோஷனுக்காக கணினி பயிற்சியோ அல்லது அக்கவுண்ட்ஸ் பயிற்சியோ அல்லது வேறு ஏதேனும் பயிற்சியோ பெற விரும்பி அதற்கு செல்பவர்கள் இப்படிப் பலர். இவர்கள் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சனை கேலி மற்றும் கிண்டல்.

 

சாதிக்கத் துடிப்பவர்களுக்கு இறுதியில் அவர்கள் பெரும் வெற்றிக் கனி தான் மனதில் இருக்கவேண்டுமே தவிர, இடையே சந்திக்கும் கேலி கிண்டல்களோ மான அவமானங்களோ அல்ல.

கேலி என்பது கையாலாகாதவர்களின் ஆயுதம். அதை புறக்கணிப்பது ஒன்றே அதை வலுவிழக்கச் செய்யும் முறை.

சிரிச்சவங்களைப் பார்த்து நான் சிரிக்கிறேன்!

என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால குடியேற போறதா சொன்னேன்.

எல்லோரும் சிரிச்சாங்க …

ஆனா நான் அமெரிக்காவுல குடியேறினேன் !

என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன்.

எல்லோரும் சிரிச்சாங்க …

நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.!

அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன்.

எல்லாரும் சிரிச்சாங்க …

நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.!

சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது

இவன் இனி அவ்வளவுதான் அப்டினு சொல்லி சிரிச்சாங்க …

நான் மீண்டும் மீண்டு வந்தேன்.!

என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன்.

எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க …

நான் கவர்னர் ஆனேன்.!

இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் …

அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க… ஆனால் நான் தன்னம்பிக்கையாலும் என்னோட கடின உழைப்பாலையும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.!

எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது.! அது அவர்களின் வியாதி. நம்மை பற்றியும் தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது.!

– கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு

One comment

Leave a Reply