அருந்ததி பட்டாச்சார்யா – சக்தி வாய்ந்த இந்திய பெண்

சக்திவாய்ந்த பெண்களின் வரிசையில் எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா 5-வது இடத்தில் உள்ளார் என்று போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருக்கும் அருந்ததி பட்டாச்சார்யா இந்த பதவியில் அமர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் 4 இந்தியர்கள் உள்ளனர்.

பார்ச்சூன் இதழின் படி இந்திய பெண்களின் சாதனை பட்டியல் படி பட்டாச்சார்யா 2ம் இடத்தில் உள்ளார்

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் 25 வது இடத்தில் பட்டாச்சார்யா இடம் பிடித்துள் ளார். பெண் தலைவர், தொழில் முனைவோர், முதலீட்டாளர், விஞ்ஞானி, தத்துவவியலாளர், மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள் என பல முக்கிய பெண்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கியின் சாந்தா கொச்சார் 40-வது இடத்திலும், பயோகானின் தலைவர் கிரண் மஷூம்தார் ஷா 77-வது இடத்தி லும் மற்றும் ஹெச்டி மீடியாவின் ஷோபனா பாட்டியா 93-வது இடத்திலும் உள்ளனர்.

தவிர இந்திய வம்சாவளியை சேர்ந்த பெப்சிகோ தலைவர் இந்திரா நூயியும் இந்த பட்டியலில் உள்ளார்.

200 ஆண்டுகள் பழமையான வங்கி நடைமுறைகளில் பட்டாச்சார்யா தொழில்நுட்பத்தை கொண்டு வந்தவர் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது. டிஜிட்டல் வங்கிக் கிளைகளை கொண்டு வந்தார், மேலும் ஸ்டேட் வங்கி மொபைல் வாலட், ஸ்மார்ட்போன் மூலமான சில்லரை வர்த்தக வங்கிச் சேவைகள் என பல தொழில்நுட்பங்களை கொண்டு வந்துள்ளார்.

மேலும் இவர் பொறுப்புக்கு வந்த பிறகு வங்கிக் கிளைகளை 17,000 ஆக அதிகரித்துள்ளார் என்பதும் 36 நாடுகளில் 33 கோடி மக்களுக்கு வங்கிச் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளார் என்பதும் முக்கியமானது.

இவர்தான் ஆஸ்திரேலியாவுக்கு சென்று பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானி குழுமத்துக்கு ரூ6,000 கோடி கடன் கொடுக்க காரணமானவர்… மத்திய பாஜக அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கக் கூடியவர் என்பதால் அருந்ததி பட்டாச்சார்யா அடுத்த ரிசர்வ் வங்கி ஆளுநராக்கப்படலாம் என அப்போது கூறப்பட்டது.

Leave a Reply