32 வருட சதியை உடைத்தெறிந்த தீபா:சசிகலா குடும்பத்தினர் பேரதிர்ச்சி

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் கைப்பற்றுவதற்காக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் முயற்சி செய்து வந்தனர்.

சசிகலாவிற்கு மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்து பொதுச்செயலாளராக நியமித்தனர். ஆனால் தொண்டர்களிடையே சசிகலா தலைமை விரும்பவில்லை என தெரிகிறது.

இதற்கிடைய ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெ.,வின் அண்ணன் மகள் தீபா கூறி வந்தார். ஜெயலலிதா இருக்கும் வரை அவரது உறவினர்களையோ, கட்சி நிர்வாகிகளையோ ஜெ.,வை சந்திக்க விடாமல் சசிகலா குடும்பம் தடைப் போட்டு வந்ததாக தீபாவும் குற்றம்சாட்டியிருந்தார்.

ஜெ.,வின் மரணத்தால் ஏற்பட்ட அவமானத்தால் தனது அத்தையின் மரணத்திற்கு பதில் தேடியும், அதிமுகவின் உண்மை தொண்டர்களின் விரும்பத்திற்காகவும் அரசியலில் குதிக்க போவதாக தீபா முடிவு செய்திருப்பதாக கூறியிருந்தார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாளான இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக தீபா தெரிவித்திருந்தார். இன்று காலை 6.30 மணிக்கு தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார்.

பின்னர் 7 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு எதிர்கால அரசியல் திட்டம் குறித்து சபதம் எடுத்திருக்கிறார்.

இன்று மாலை 4 மணிக்கு தீபா தனது அரசியல் பாதைக்கான அடித்தளம் குறித்து அறிவிக்க உள்ளார். தீபாவிற்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆதரவு தெரிவித்து சென்னையில் முகாமிட்டு உள்ளனர்.

சிறு துரும்பு பல் குத்த உதவும் என்பார்கள். அதுபோல ஒன்றுமே தெரியா தீபா அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியபோது அவரை எள்ளி நகையாடியது எதிர்தரப்பு கும்பல்.

தீபாவின் அரசியல் பிரவேசம் எங்கே தங்களது 32 வருட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்ற பேரதிர்ச்சியில் சசிகலா தரப்பு உள்ளதாக கார்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

liveday

Leave a Reply