10ம் தேதிக்குள் தீர்ப்பு.? சிஎம்மாதான் ஜெயிலுக்கு போவேன்.! அடம் பிடிக்கும் சசி.! வேலைகள் ஆரம்பம்.!

தமிழக அரசியலில் நாளுக்கு நாள், தினம் தினம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வந்து கொண்டே உள்ளது.
கடந்த1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டுவரை நடந்த ஆட்சியில் ஜெயலலிதா சசிகலா உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக கடந்த திமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கு கா்நாடக உயா் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. அதில் குற்றவாளியாக தீா்ப்பு வழங்கப்பட்டது.
இதில் ஜெயலலிதா உள்ளிட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 வருடம் சிறை தண்டனை 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
மேல் முறையீட்டில் இந்த 4 பேரும் குற்றமற்றவா்கள் என கூறி விடுதலை செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. தற்போது தீர்ப்பு  மட்டுமே வெளியிட வேண்டிய நிலையில் அந்த வழக்கு உள்ளது,
இந்த நிலையில்  முதல் குற்றவாளியாக வழக்கில் சோ்க்கப்பட்ட ஜெயலலிதா இறந்தார்.
தற்போது வரபோகும் தீா்ப்பில் இருந்து சசிகலா மற்றும் அவருடன் வழக்கில் சோ்க்கப்பட்ட மற்றவா்களுக்கு தண்டனை உறுதி என்று சட்ட வல்லுனா்கள் கூறிவருகின்றனா்.
இந்த தீர்ப்பு வரும் 10ம் தேதிக்குள் வந்து விடுமாம். அப்படி 10ம் தேதிக்குள் வந்தால் சசிகலாவின் முதல்வா் கனவு, கனவாகதான் இருக்குமாம்.
ஜோதிடத்தில் கூறுவது போல அவா் முதல்வராக பதவி ஏற்றப்பின்பு சிறைக்கு சென்றால் வெளியே வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளதாம்.
தீர்ப்பு வருவதற்குள் முதல்வரானால் தீா்ப்புகள் கூட ஆண்டவனால் திருத்தப்படலாம் என்றும் கூறுகின்றனா்.
அதற்காகதான் பன்னீர் செல்வத்திடம் சசிகலா கரடு, முரடாக நடந்து வருகிறாராம்.
மத்திய அரசும் வருமானவரிதுறையின் மூலம் சசிகலாவை கைது செய்யலாம். அப்படி செய்தால் அது மத்திய அரசின் பழிவாங்கும் செயல் என்று திசை திருப்ப வாய்ப்பு உள்ளது.
ஏன் அவராகவே ஜெயிலுக்கு போக நேரம் வரும்போது, நாம் ஏன் தலையிட்டு பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு நினைக்கிறது.
சசிகலா முதல்வராக ஜெயிலுக்கு போவாரா, அல்லது அதற்கு முன்னே போவாரா என்று பட்டிமன்றமே தமிழ மக்கள் இடையே நடந்து வருகிறது.

Leave a Reply