விடாத சசிகலா புஷ்பா..!! – ஜனாதிபதி பிரணாப்பிடம் ஜெ மரணம் குறித்து புகார்

ஜெ. மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வலியுறுத்தல்!ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா நேரில் மனு அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா. மேலும் சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச்செயலராவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெல்லியில் முகாமிட்டுள்ள சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நேரில் சந்தித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தினார் சசிகலா.

இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்த சசிகலா புஷ்பா, ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மனு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்த உள்ளார் சசிகலா புஷ்பா.

Leave a Reply