விசுவாசம் உள்ள பன்னீர் மனதில் தீபா தான் ‘சின்ன அம்மா’

முதல்வர் பன்னீர் செல்வம் .. அடிமட்டத்தில் இருந்து கடும் உழைப்பால் முன்னுக்கு வந்தவர். அம்மா ஜெ.வால் மட்டுமே அவர்  மிக உயார்ந்த இடத்தைப் பிடித்தார்..!

மூன்று முறை தமிழ் நாட்டின் முதல்வர் நாற்காலியில் அமர்வது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல..!

வைகோ..விஜயகாந்த் வாசன் போன்ற புகழ் பெற்ற தலைவர்களால் கூட முடியாத ஒன்று. பன்னீருக்கு அந்த உயரத்தை கொடுத்தவர் அம்மா ஜெ..!

தவிர இயற்கையாகவே பன்னீர் அம்மாவின் தீவிர பக்தர்..!அம்மா இறந்த பின்னும் முதல்வர் என்கிற தகுதியை சசிகலா கொடுக்க வில்லை. பிரதமர் கொடுத்த பதவி அது என்பதையும் பன்னீர் நன்றாகவே உணர்ந்துள்ளார்..!

இந்த டெல்லி பயணம் ..வெறும் நிதி கேட்டு போகும் விஷயம் அல்ல என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழகத்தின் அதிமுகவின் எதிர்காலம் குறித்த முக்கியப் பயணம் என்று கூறுகிறார்கள்.

முதல்வர் பன்னீரிடம் பிரதமர் ஜெ. மரணம் குறித்து விசாரணை மேற்கொள்வார் என்பது ஒரு புறம் இருந்தாலும், அதிமுகவின் அடுத்த வாரிசு  யார் என்பதும் பிரதான ஆலோசனையாக இருக்கும்…!?

அந்த சூழ்நிலையில் முதல்வரின் முதல் ஜாய்ஸ் அம்மாவின் நேரடி  ரத்த உறவான தீபா தான் என்று அடித்துக் கூறுகிறார்கள்…!

சசிகலா என்னதான் முயற்சி செய்தாலும் டெல்லி தீபாவைத்தான் ஜெ.வின் வாரிசாகக் களம் இறக்கும் என்றும் அடித்துக் கூறுகிறார்கள். அப்டியா..?

 

newstig.com

Leave a Reply