வழக்கு… தீர்ப்பு வழங்க ரெடி நீதிபதிகள்…! பதட்டத்தில் சசிகலா..!!

சசிகலா..!!

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சி தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் சசிகலா, முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்று நிர்வாகிகள், அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப் போவதாக டெல்லியில் இருந்து வந்த தகவலால் சசிகலா பீதியில் ஆடிப்போயுள்ளாராம்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டத்தில் இன்று காலை சசிகலா உற்சாகமாக கலந்து கொண்டார். ஆனால் மதிய உணவுக்காக போயஸ் கார்டனுக்குப் போன சசிகலா ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம்.

டெல்லியில் இருந்து வந்த தகவல்தான் அப்படி அப்செட் ஆகி அவரை பீதியில் ஆட வைத்துவிட்டதாம். அதாவது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்கின்றனர். இதனால் எந்த நேரத்திலும் இந்த தீர்ப்பு தேதியை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தும் என்ற தகவல் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டதாம்.

முதல்வர் பதவியை கைப்பற்றி அமர்ந்துவிடலாம் என துடித்துக் கொண்டிருந்த சசிகலா பதட்டத்தில் உள்ளதாக கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

liveday

Leave a Reply