முதல்வர் பதவி அவ்வளவு ஈசியாக போய்விட்டதா.. ஆத்திரத்தில் மக்கள்..

 சென்னை: சசிகலாவை முதல்வராக்கும் அளவுக்கு அந்த பதவி எளிதாக போய்விட்டதா..? என ‘ஒன்இந்தியாதமிழ்’ வாசகர்களில் அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்கியதன் மூலம், அவரை முதல்வர் பதவிக்கு நகர்த்தி செல்ல ஆயத்தங்கள் நடக்கிறது. ஜெயலலிதாவால் அரசியலில் இருந்து தூரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலா திடீரென முதல்வர் பதவி வரை நகர்வது குறித்து வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஒன்இந்தியாதமிழ் வெப்சைட் சார்பில் கருத்து கணிப்பு நடத்தினோம். சசிகலாவை முதல்வராக ஏற்றுக்கொள்வோம், ஏற்றுக்கொள்ள மாட்டோம், தேர்தலில் ஜெயித்து வந்தால் ஏற்போம், முதல்வர் பதவிக்கு அவருக்குத் தகுதியில்லை, வேறு யாரேனும் முதல்வராக்கலாம், முதல்வர் பதவி அவ்வளவு எளிதாக போய்விட்டதா.. என்று இத்தனை கேள்விகள் முன் வைக்கப்பட்டன.
ஏற்றுக்கொள்வோம்
ஏற்றுக்கொள்வோம் இதில் சசிகலா முதல்வராக பதவியேற்றால் அதை ஏற்றுக்கொள்வோம் என 4.76 சதவீத வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதைவிட அதிகமாக 25.03 சதவீதம் பேர் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கூறியுள்ளனர்.
ஏற்றுக்கொள்வோம்
தகுதியில்லை
தகுதியில்லை தேர்தலில் ஜெயித்து வந்தால் ஏற்போம் என 9.91 சதவீதம் பேரும், முதல்வர் பதவிக்கு அவருக்குத் தகுதியில்லை என 24.86 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். முதல்வர் பதவிக்கு சசிகலா வந்தால் ஏற்க மாட்டோம் என்பவர்களும், அவருக்கு பதவிக்கான தகுதியில்லை என கூறுபவர்களும் இணைந்தால் அது சுமார் 50 சதவீதத்தை தொடுவது குறிப்பிடத்தக்கது.
வேறு யாரேனும் முதல்வராகலாம்
வேறு யாரேனும் முதல்வராகலாம்
வேறு யாரேனும் முதல்வராகலாம் வேறு ஒருவர் முதல்வராகலாம் என்ற ஆப்ஷனுக்கு 1.69 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்கள் அதிமுக ஆட்சியே வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் என கருதலாம். முதல்வர் பதவி அவ்வளவு எளிதாக போய்விட்டதா என்ற ஆப்ஷனுக்கு, அதிகபட்சமாக 33.75 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் முதல்வர் பதவி என்பது பந்தாடப்படுவதை இவர்கள் விரும்பவில்லை. ஜெயலலிதா, பன்னீர்செல்வம் இப்போது சசிகலா என அந்த நாற்காலி 3 மாத காலத்தில் 3 பேரிடம் செல்வதை யார்தான் விரும்புவார்கள். எதிர்பார்க்கவேயில்லை, என்று 1.4% வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சசிகலா பின்னால் இருந்து ஆட்சியை இயக்க வாய்ப்பிருப்பதாகவோ அல்லது அதிகாரம் வேண்டாம் என்று பரந்த மனதோடு விலகியிருக்கவோ சசிகலா முடிவெடுப்பார் என இவர்கள் எதிர்பார்த்திருக்கலாம்.
ஓ.பி.எஸ்.தான் பெஸ்ட்
ஓ.பி.எஸ்.தான் பெஸ்ட்
ஓ.பி.எஸ்.தான் பெஸ்ட் ஓ.பி.எஸ்தான் பெஸ்ட் என்ற ஆப்ஷனுக்கு 14.75% வாசகர்கள் வாக்களித்துள்ளனர். இவர்கள் ஓ.பி.எஸ் நிர்வாகம் பிடித்து வாக்களித்தார்களோ, சசிகலாவைவிட ஓ.பி.எஸ் பரவாயில்லை என வாக்களித்தார்களோ என்பது அவர்கள் மனதுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
சசிகலா முதல்வராகலாமே சசிகலா முதல்வராகலாமே
சசிகலா முதல்வராகலாமே சசிகலா முதல்வராகலாமே, என்ற ஆப்ஷனுக்கு 2.03% பேர் வாக்களித்துள்ளனர். சசிகலா முதல்வராவதை விரும்புவதற்கு மக்கள் இருந்தாலும், அது சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
பொதுத்தேர்தலே ஒரே தீர்வு
பொதுத்தேர்தலே ஒரே தீர்வு
பொதுத்தேர்தலே ஒரே தீர்வு ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டியது, பொதுத்தேர்தலே ஒரே தீர்வு, என்ற ஆப்ஷனுக்குத்தான் அதிகபட்சமாக 48.82% வாக்குகள் கிடைத்துள்ளன. ஜெயலலிதா என்ற பிம்பத்தை முன்னிறுத்திதான் அதிமுக வாக்குகளை வாங்கியது. வேறு யாரையும் அக்கட்சியில் முன்னிறுத்தவில்லை. எனவே, ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவது சரி என்பது இவர்கள் விருப்பம். சட்டப்படி இது அத்தியாவசியம் இல்லை என்றபோதிலும், சட்டத்தை தாண்டிய தார்மீக அடிப்படையில் தேர்தலை நடத்துவது சரியாக இருக்கும் என்பதே இந்த வாசகர்கள் விருப்பம்.

Leave a Reply