மருத்துவனை ரகசியத்தை வெளியிட்டார் பிரான்ஸ் தமிழச்சி

22-செப்டம்பர் 2016 இல், இரவு 9.30க்கு வேதா நிலையத்தில் இருந்து ஜெயலலிதா ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போலோவிற்குள் ஆம்புலன்ஸ் நுழைந்த நேரம் இரவு 10.15.

வேதா நிலையத்தில் இருந்து சென்னை க்ரிம்ஸ் லைனில் உள்ள அப்போலோவிற்குள் நுழைய ஆம்புலன்ஸ் எடுத்துக் கொண்ட நேரம் 45 நிமிடங்கள்.

23- செப்டம்பர் 2016 நள்ளிரவு 1.00 மணியளில், “ஜெயலலிதா சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல் சோர்வுக்கு சிகிச்சை பெற அப்போலோ மருத்துவனையில் அனுமதிப்பட்டுள்ளார்” என்று தாமதமாக அப்போலோ நிர்வாகம் முதன் முறையாக அதிகாரப்பூர்லமாக அறிவித்தது. அதன் பிறகே தமிழ்நாட்டு மக்களுக்கு பொதுஊடகங்கள் வழியாக செய்திகளை அறிய முடிந்தது.

அரசியலில் ஆளும் கட்சியில் முதல்வராக உள்ள நபர் வசிப்பிடத்தில் 24 மணிநேரமும் கண்காணிப்பு கேமராவை நுழைவு வாயில் வழியில் பொறுத்தப்பட்டு இருக்கும். யார் உள்ளே சென்றாலும் அல்லது யார் வெளியே சென்றாலும் காட்சிகள் பதிவாகும்.

அப்படித்தான் ஜெயலலிதாவை ஆம்புலன்ஸ் மூலமாக அப்போலோ கொண்டு செல்லப்பட்ட போது காட்சிகள் பதிவாகி இருக்கும். அதேப்போல் அப்போலோ நுழைவு வாயில் வழியிலும் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அதிலும் காட்சிகள் பதிவாக இருக்கும்.

அந்த காட்சியில் ஜெயலலிதா சுயநினைவுடன் அமர்ந்து இருந்தாரா? சுயநினைவற்ற நிலையில் படுக்க வைக்கப்பட்டிருந்தா? என்ற காட்சியை தமிழ்நாட்டு மக்களிடம் காட்ட வேண்டும். ஆனால் அப்படி எந்த காட்சிகளும் ஊடகத்தில் வரவில்லை.

இப்போது ஜெயலலிதாவின் மர்மான மரணம் தமிழர்களிடையே மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பேசும் நிகழ்வாகி உள்ளது. எனவே பொதுநல வழக்கு தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் என்ன காட்சிகள் பதிவாகி உள்ளன என்பதை இந்திய மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும் அப்போலோவிற்கும் உள்ளது.

இப்படி ஒரு வழக்கு தொடரப்படுமானால் வேதா நிலையத்தில் ஆம்புலன்ஸ் வெளியேறிய அன்று கேமரா வேலை செய்யவில்லை என்பார்கள். அப்போலோவில் கேட்டால் அவ ர்களும் அன்று கேமரா வேலை செய்யவில்லை என்பார்கள்.

ஏனெனில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட இடத்திலும் கேமரா வேலை செய்யவில்லை. ராம்குமார் சிறைக்குள் படுகொலை செய்யப்பட்ட அன்றும் கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை. ஜெயலலிதாவுக்கும் இதே பதில் வருமானால்….

ஜெயலலிதா மர்மமாக சாவதற்கு என்ன அவர் சாதாரண மனிதரா? அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவருடைய மரணம் என்பது பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் / சசிகலா, மன்னார்குடி மாபீயா கூட்டணிகளினால் நடத்தப்பட்ட படுகொலை என்று பொதுநல வழக்கு தொடரப்படுமானால்…

இந்திய நீதிமன்றத்தில், ‘படுகொலை அல்ல, இயற்கை மரணம்’ என்பதை நிறுபிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கும், அப்போலோ மருத்துவனைக்கும் உள்ளது.

அதிமுகவின் உண்மை தொண்டர்கள் இதற்காகவாவது போராடுவார்களா?

தமிழச்சி
09/12/2016

 

todayindian.info

Leave a Reply