மனைவியாக வாழவில்லை, ஆனால் நல்ல அம்மாவாக இறப்பேன்!

தனித்து நிற்பவர், தன்னை சுற்றி அரண் அமைத்துள்ளவர் என்று சில விமர்சனங்களைக் எதிர்கொண்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஒரு காலத்தில் தன்னைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

கடந்த 1999ஆம் ஆண்டு ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விக்கு மிகவும் தைரியமாகவும், வெளிப்படையாகவும் பதில் அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் நிருபர், உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பல இடங்களில் வதந்திகள் நிறைந்திருக்கிறதே, அதைப் பற்றி? என்று கேட்கிறார்.

அதற்கு ஜெயலலிதா, ”நான் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அனைவரும் எம்.ஜி.ஆர் மீது காதல் கொண்டனர். நானும் தான்.

ஆனால், அவருடன் சட்டரீதியான உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால், தனித்துவமான ஒரு அடையாளத்தை எனது வாழ்க்கையில் உருவாக்க நினைத்தேன்.

என்னுடைய இக்கட்டான நேரங்களில் எனது அம்மா என்னுடன் இல்லை, ஒரு வேளை அவர் இருந்திருந்தால், எனது தனிப்பட்ட வாழ்க்கை நன்றாக இருந்திருக்கோம்.
tamilvoice.com

நான் எம்.ஜி.ஆர்-ஐ தலைவராக ஏற்றுக்கொண்டுடேன். அதன் மூலம் அரசியலுக்கும் வந்தேன். இந்திய கலாச்சாரத்தின்படி பெண் என்றாலே, பிறக்கும் போது மகளாக இருந்து, மனைவியாக வாழ்ந்து, அம்மாவாக இறக்கிறார்கள்.  நான் ஒரு மனைவியாக வாழவில்லை என்றாலும், கண்டிப்பாக நல்ல அம்மாவாக இறப்பேன்.” என்று பதில்  தெரிவித்துள்ளார். அவர் சொல்லியது போலவே தற்போது அம்மா என்றாலே ஜெயலலிதா தான், என்று சொல்லும் அளவுக்கு தமிழக மக்களின் மனதில் நிலைத்து நின்றுள்ளார்.

Leave a Reply