பன்னீர் செல்வத்தின் அடுத்தடுத்த அதிரடி!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதனால் கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், மற்ற அமைச்சர்களும் நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டனர்.

ஜெயலலிதா மறந்த மறுநாளிலிருந்து சசிகலாவை சந்தித்து அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழக முதலமைச்சராகவும் சசிகளாவே வரவேண்டும் என அமைச்சர்கள் மொட்டையடித்து தங்களது கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், சசிகலா முதல்வர் ஆகவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பினாமி என கூறப்படும், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவருமான இளங்கோவன் வீட்டில் மற்றும் சேலம் வங்கியில் வருமானவரி துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சோதணை மேற்கொண்டனர்.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் மாவட்டம் முழுவதும் செயல்படும் 64 வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நவம்பர் 8ம் தேதிக்கு மேல் விவசாயிகள் பலர் பெயரில் போலியாக வங்கி கணக்குகள் துவங்கி, அதன் மூலம் ரூ.150 கோடிக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து வருமான வரித்துறையின் விசாரணை நடத்திவருகின்றனர். சசிகலாவிற்கு நம்பிக்கைக்குரிய அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி என கூறப்படும், இளங்கோவன் வங்கி மீது நடந்த இந்த சோதனையை அடுத்து சசிகலாவிற்கு நெருக்கமான அமைச்சர்கள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.கள் கலக்கத்தில் உள்ளனர். பன்னீர்செல்வம் சந்திப்பிற்குப் பிறகு, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் சேகர் ரெட்டி சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்பான ஆவணங்கள் எதுவும் இளங்கோவனிடம் உள்ளதா என்ற கோணத்தில் இந்த அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக வருவமானவரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.